இந்தியா

ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகை ரூ.9000 ஆக உயர்வு!!

வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தனது ஊழியர்களுக்கான குறைந்தபட்ச பென்ஷன் தொகை 9000 ரூபாயாக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்திலிருந்து பிஎப் தொகைக்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இதனுடன் நிறுவனங்கள் கூடுதலாக தொகையை வரவு வைத்து வருகிறது. இந்த தொகை அவர்கள் ஓய்வு பெறும் பொது ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் PF வட்டி விகிதம் 8.5% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டித்தொகை பிஎஃப் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவ்வப்போது ஈபிஎஃப்ஓ இதில் மாற்றங்களை அறிவித்து வருகிறது.

ஆதார் எண்ணை பிஎப் கணக்குடன் இணைக்கப்பட வேண்டும். பிஎப் கணக்குதாரர் தனக்கென நாமினியை தேர்ந்தெடுக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தின் ஒரு பகுதியாக அமைப்புசாரா துறை ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை 9,000 ரூபாயாக உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

சென்ற 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதமே குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 1,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக உயர்த்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்த நிலையில் தற்போது தான் அவற்றை நடைமுறை படுத்துவதற்கான வேலைகளை EPFO அமைப்பு மேற்கொண்டு வருகிறது. தற்போது குறைந்தபட்ச பென்ஷன் தொகை 9,000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளதால் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது குறித்து அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  இந்தியாவில் புதிதாக 10,488 பேருக்கு கொரோனா!
Back to top button
error: