ஐபிஎல் 2022-ன் 42வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். லக்னோ தரப்பில் டிகாக் 46 ரன்களும், தீபக் ஹூடா 34 ரன்களும் எடுக்க, பின்னர் அந்த அணி 153 ரன்களை எட்டியது.
இந்த இலக்கை துரத்த வந்த பஞ்சாப் அணியை சேர்ந்த எந்த பேட்ஸ்மேனும் அணி வெற்றியை எட்ட முடியாமல் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தப் போட்டியில் லக்னோ 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh