இந்தியா

ஜன.31 முதல் தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்..!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ல் துவங்குகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது நான்காவது பட்ஜெட்டை அடுத்த மாதம் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

இந்த பட்ஜெட் கூட்டங்கள் பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறும் எனவும், இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட் சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பாதிப்பை அடுத்து சிறு வணிகர்களுக்கும் ஊக்கத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி முடிவடைகிறது. நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: