இந்தியா

கார்களை வீடுகளுக்‍கு முன்பு நிறுத்தினால் பார்க்‍கிங் கட்டணம்.. பெங்களூரில் புதிய பார்க்கிங் கொள்கை..

பெங்களூருவில் வீடுகளுக்‍கு முன்பு நிறுத்தப்படும் கார்களுக்‍கு 5 ஆயிரம் ரூபாய் வரை, பார்க்‍கிங் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வீடுகளில் பார்க்‍கிங் வசதி இல்லாமல், சாலையில் கார்களை நிறுத்துவோருக்‍கு பெங்களூருவில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவில் புதிய பார்க்‍கிங் கொள்கைப்படி, வீடுகள் முன்பு நிறுத்தப்படும் சிறிய கார்களுக்‍கு ஆண்டுக்‍கு ஆயிரம் ரூபாயும், மத்திய ரக கார்களுக்‍கு 3 ஆயிரம் ரூபாயும், பெரிய கார்களுக்‍கு 5 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒருவரின் பெயரில் ஒரு கார் மட்டுமே வீட்டின் முன்பு நிறுத்த அனுமதி வழங்கப்படும். அத்தகைய வாகனங்கள், அவசர வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக இருக்‍கக் கூடாது என்று தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இந்த புதிய பார்க்‍கிங் கொள்கை சோதனை அடிப்படையில் முதலில் சில பகுதிகளில் மட்டுமே அமல்படுத்தப்படவுள்ளது.

Back to top button
error: Content is protected !!