சினிமாபொழுதுபோக்கு

‘பாண்டியன் ஸ்டோர்ஸ் சுட்டிக் குழந்தையின் பெயர் சூட்டு விழா’ – 3 மணிநேர சிறப்பு தொடர்! ரசிகர்கள் குஷி..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சில நாட்களாக எபிஸோடுகள் சுவாரசியம் இல்லாமல் போய்க் கொண்டிருந்தாலும் தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கூட்டு குடும்ப கதையம்சத்தை பெற்றுள்ளதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மக்கள் மத்தியில் தனி மவுசு தான். மேலும் கதிர் முல்லைக்கு எப்பொழுது ரொமான்ஸ் சீன் வரும் என்று பல மாதங்களாக எதிர்பாத்திருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அதுவும் நடந்தேறியது. அதன் பிறகு சீரியல் சற்று சுவாரசியம் இல்லாமலேயே இருந்தது. இதனால் பலரும் மொக்கையாக போகிறது என்று சலித்துக் கொண்டனர்.

name ceremony

மேலும் நேற்றைய எபிசோடில் கூட கதிர், முல்லை குழந்தையை பார்க்க மீனா வீட்டிற்கு சென்றனர். ஆனால் மீனா ஒரு சாதாரண ரூமிற்க்காக வீட்டிற்கு வந்தவர்களை அசிங்கப்படுத்தினார். இதனால் வீட்டிற்கு வந்து முதல் ஆளாக ரூமை காலி செய்தனர். இதுவரையிலும் சிங்கிளாக இருந்து வந்த கண்ணனுக்கு தற்போது புது ஜோடியும் வந்து விட்டது.

name 2

இந்நிலையில் ஜீவா ரூம் விஷயத்தில் மிகவும் சங்கடப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் கதிரிடம் மன்னிப்பும் கேட்கிறார். கதிர் எதுவும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறி சமாதானபடுத்துகிறார். மேலும் இன்றைய எபிசோடும் இப்படியே நகர்கிறது.

தற்போது விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. மீனாவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை பற்றி சில எபிசோடுகளில் பல ஆலோசனைகள் ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைக்கு என்ன வாங்கலாம் என்றும் யோசித்து கொண்டிருந்தனர்.

name 4

இந்நிலையில் திங்கட்கிழமை சிறப்பு தொடராக குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற உள்ளது. ஜனார்த்தனன் குழந்தைக்கு அழகான தொட்டிலை பரிசளித்துள்ளார். மேலும் சொந்த பந்தங்கள் ஒன்று கூடி இந்த விழா நடைபெறுகிறது. தனம் குழந்தையை தொட்டிலில் போட்டு தாலாட்டு பாடுகிறார்.

name last

இதனை திங்கள் அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணிநேர சிறப்பு தொடராக ஒளிபரப்பாக உள்ளது. ஏற்கனவே வளைகாப்பு விழாவை வெகு சிறப்பாக நடத்தினர். இப்பொழுது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவையும் அசத்த உள்ளனர். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் அனைவரும் குஷியில் உள்ளனர்.

loading...
Back to top button
error: Content is protected !!