ஆன்மீகம்

பஞ்சகவ்யம் மற்றும் அதன் செய்முறை!

இந்துக்களின் முக்கியச் சடங்குகளின் போது ‘பஞ்ச கவ்யம்’ அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ‘பஞ்ச கவ்யம்’ என்பது பசு மாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருள்களைக் குறிக்கிறது. அவை முறையே, கோமூத்திரம், கோமயம் (சாணி), பால், தயிர், நெய் என்று கூறப்படும் ஐந்து பொருட்கள் ஆகும்.

விவேக சிந்தாமணியின் கருத்துப்படி:

கோமூத்திரத்துக்கு வருணனும், கோமயத்துக்கு அக்னியும், பாலுக்குச் சந்திரனும், தயிருக்கு வாயுவும், நெய்க்கு விஷ்ணுவும் தேவதைகளாம்.

பஞ்ச கவ்யம் செய்யும் முறை:

செந்நிறத்த பசுவிடம் கோமூத்திரத்தையும், வெள்ளைப் பசுவிடம் கோமயத்தையும், பொன்னிறப் பசுவினிடம் பாலையும், நீல நிறப் பசுவிடம் தயிரையும், கரு நிறப் பசுவினிடம் நெய்யையும் கொள்ளின் நலமெனப்படும். அதிலும், கோமூத்திரம், கோமயம் இவை இரண்டும் ஆறு மாத்திரை எடையும், நெய்யும் பாலும் மூன்று மாத்திரை எடையும், தயிர் பத்து மாத்திரை எடையும் இருத்தல் வேண்டும் என்பது ஐதீகம். இதை மந்திர பூர்வமாகக் கலந்து உண்ணும் பட்சத்தில் பாபங்கள் நீங்கும். வாதைகள் குறையும். இதனால் கர்ம வினை அல்லது பூர்வ ஜென்ம சாபங்கள் நீங்கி வாழ்க்கை மேம்படும். இதுவே சாஸ்திரங்களின் நம்பிக்கை ஆகும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரத சப்தமியின் சிறப்புக்கள்!
Back to top button
error: