தமிழ்நாடு

மது போதையில் இருந்த பெயிண்டர்.. 2-வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு!

சென்னை திருவொற்றியூர் காந்தி நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பெயிண்டர் குமாரன். இவர் மது போதைக்கு அடிமையாகி, வேலைக்கு சரிவர செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (ஜன.25) காலை முதலே மது போதையில் இருந்து அவர் நேற்று மாலை அதிகளவில் மது அருந்திவிட்டு இரண்டாவது மாடியில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக எழுந்து நிற்கும்போது மாடியிலிருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக திருவொற்றியூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், குமாரனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Back to top button
error: Content is protected !!