இந்தியா

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் செப்.25 வரை பள்ளிகளை மூட உத்தரவு – மாநில அரசு அறிவிப்பு!!

கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு வருகிற செப்டம்பர் 25ம் தேதி வரை பள்ளிகளை மூட வேண்டும் என மாநில அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் குடியிருப்பு பள்ளிகளுக்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலையை தடுக்கும் நோக்கில் மாநில அரசுகள் சார்பில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதில் முதற்க்ட்ட நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழிக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், முறையான வழிகாட்டு நெறிமுறைகள் என நோய்த்தொற்று பாதிப்பு படிப்படியாக கட்டுக்குள் வந்தது. தினசரி 4 லட்சம் வரை உறுதியாகி வந்த எண்ணிக்கை தற்போது 40 ஆயிரமாக குறைந்து உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சில மாநிலங்களில் கொரோனா 3வது அலை அச்சத்தின் காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதமாகி உள்ளது.

சமீபத்தில், இமாச்சலப் பிரதேச அரசு அந்த மாநிலத்தில் பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டது. இமாச்சலப் பிரதேச பள்ளிகள் செப்டம்பர் 25, 2021 வரை மூடப்பட்டிருக்கும். முன்னதாக மாநிலத்தில் கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்ததால் செப்டம்பர் 21 வரை பள்ளிகளை மூட அரசு முடிவு செய்தது. மாநிலத்தின் கோவிட் -19 சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிகளை மேலும் மூடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, குடியிருப்பு பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும். மேலும், கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத பணியாளர்கள் தொடர்ந்து பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும் என்று உத்தரவு கூறுகிறது. குடியிருப்புப் பள்ளிகளைப் பொறுத்தவரை, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பராமரித்தல், சுத்திகரிப்பாளர்களைப் பயன்படுத்துவது போன்ற கடுமையான நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். COVID-19 பரவுவதை தடுக்க கல்வித் துறையால் உருவாக்கப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை குடியிருப்பு பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DR) உயர்வு – இதோ முழுவிவரங்கள்!
Back to top button
error: