இந்தியா

ஜம்மு-காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவும் டிரோன்கள்.. சுட்டு வீழ்த்த பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவு!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் அத்துமீறி நுழைவது அதிகரித்து வரும் நிலையில், அவற்றை ரப்பர் புல்லட்டுகளால் சுட்டு வீழ்த்த பாதுகாப்புப் படைக்‍கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீர் எல்லைக்குள், ட்ரோன்கள் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தில், அண்மையில் ட்ரோன் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:  உலகளவில் கொரோனாவால் 22.92 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு!

இந்நிலையில் முக்கிய கட்டுமானங்கள், விமான நிலையங்கள் மற்றும் ராணுவ முகாம்களுக்கு அருகே, ட்ரோன்கள் பறந்து வந்தால், அவற்றை ரப்பர் புல்லட்டால் சுட்டு தகர்க்க, பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ட்ரோன் தாக்குதலை எதிர்கொள்ள, உரிய தொழில்நுட்ப சாதனம் கண்டுபிடிக்கப்படும் வரை, ரப்பர் தோட்டா துப்பாக்கிகளை பயன்படுத்த பாதுகாப்புப் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிகளால் நிலத்தில் இருந்து 60 முதல் 100 மீட்டர் உயரத்தில் பறக்கும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த முடியும் என்பது குறிப்பிடத்தக்‍கது.

இதையும் படிங்க:  பஞ்சாப் முதலமைச்சராக சரண்ஜித் சிங் இன்று பதவியேற்பு!

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: