தமிழ்நாடு

தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க வாய்ப்பு – கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2017 முதல் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் புதுப்பிக்கலாம் என கலெக்டர் பால சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் 10ம் வகுப்பு முடித்ததும் தங்களது கல்வி குறித்த விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது அவசியம். 10ம் வகுப்பு 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி படிப்பு முதலியனவற்றை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வைத்திருப்பது கட்டாயமான ஒன்று. மேலும் இதனை அடிக்கடி புதுப்பித்து இருக்க வேண்டும். அதுபோன்று புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு அமைந்துள்ளது. இதனை பயன்படுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம்.

இது குறித்து கலெக்டர் பாலசுப்ரமணியம் அறிக்கை ஒன்றை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது கடந்த 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் தற்போது புதுப்பித்து கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி பதிவுதாரர்கள் புதுப்பித்துக் கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதன் அடிப்படையில் ஆக.27 ஆம் தேதிக்குள் அதிகாரபூர்வ இணையதளம் வழியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் புதுப்பிக்க இயலாதவர்கள் பதிவஞ்சல் மூலம் விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் புதுப்பிப்பதற்கு https://tnvelaivaaippu.gov.in என்ற முகவரியை பயன்படுத்திக் கொள்ளலாம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  செப்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!!
Back to top button
error: