தமிழ்நாடு

செப்.6ம் தேதி 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!

கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு செப்.6ம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்க லே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையினால் தினசரி 4 லட்சம் வரை புதிய பாதிப்புகள் பதிவானது. நாள்தோறும் உயிரிழப்புகள் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனை கருத்தில் கொண்டு மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனவே பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதமாக நடைபெற்றது. இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது. தினசரி பாதிப்பு 40 ஆயிரமாக சரிந்துள்ளது.

எனவே நீண்ட நாட்களாக மூடியுள்ள பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முதற்க்ட்டமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் இன்று (செப்.1) 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது லே மாவட்ட நிர்வாகம் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செப்டம்பர் 6 முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

இது தொடர்பான அறிவிப்பை லே துணை ஆணையர் வெளியிட்டார். அந்த அறிவிப்பின் படி, லே மாவட்டத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செப்டம்பர் 6 முதல் மீண்டும் திறக்கப்படும். அனைத்து பள்ளிகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தனித்தனியாக மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  சுகாதாரத்துறை அதிகாரிக்கு வாரத்துக்கு ஒருநாள் விடுமுறை!
Back to top button
error: