தமிழ்நாடுமாவட்டம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தமிழகத்தில் தடை – கவர்னர் ஒப்புதல்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தமிழக அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில காலமாக ஆன்லையனில் பணம் கட்டி ரம்மி விளையாடுவதால் இளைஞர்கள் பலர் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்ளும் நிலை அதிகரித்துள்ளது. இதனால், தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆன்லைன் ரம்மிக்கு தடை:

தமிழகத்தில் ஆன்லையனில் பணம் கட்டி ரம்மி விளையாடுவதால் பல இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கிறது. இதனால் பல குடும்பங்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இதை தடுப்பதற்காக தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடுக்க அவரச சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கவர்னருக்கு ஒப்புதல் வழங்கியது.

online 1

இதுகுறித்து, ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடைசெய்வது தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் பிரோகித் ஒப்புதல் வழங்கினார். நேற்று கவனர் மாளிகையில் ஆன்லைன் விளையாட்டு சம்பந்தமாக கூறப்பட்ட அறிக்கையானது 1930ம் ஆண்டு தமிழ்நாடு காவல் சட்டம், 1888ம் ஆண்டு சென்னை நகரக்காவல் சட்டம், 1859ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றிற்கு சட்ட திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் கீழ்கண்ட நோக்கங்களை இயக்கமுடியும்.

online 2

ஆன்லைன் ரம்மி விளையாடுவோரையும், கணினி மற்றும் அது சம்பந்தமான உபகரணங்களை தடை செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இந்த தடைகளையும் மீறி ரம்மி விளையாடுவர்களுக்கு 5000 ரூபாய் அபராதமும், 6 மாத சிறை தண்டனையும், அரங்கம் வைத்திருப்போருக்கு 10,000 ரூபாய் அபராதமும், இரண்டு வருட சிறை தண்டனையும் வழங்கபடும் என தெரிவித்துள்ளது.

online fffff 1

மேலும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி மற்றும் திமுக தலைவர் ரம்மி உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். மதுரையை சேர்ந்த வக்கீல் முகமது ரஸ்வி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் ஆன்லையன் ரம்மியை தடை செய்ய கோரி வழக்கு தொடர்த்துள்ளனர். இந்த வழக்க விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய எவ்வளவு காலம் ஆகும் என கூற வேண்டும் என்று தமிழக அரசிற்கு உத்திரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...
Back to top button
error: Content is protected !!