தொழில்நுட்பம்

ஆன்லைன் மூலமாக PF விண்ணப்ப பதிவு – கணக்கில் ஏற்படும் தவறுகள் ஒரு பார்வை!!

நாடு முழுவதும் உள்ள அரசு / தனியார் துறைகளிலும் மாத சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களுக்கும் PF முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் PF கணக்கில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் போது ஏற்படும் தவறுகள் குறித்து முழு விவரம் பற்றி காணலாம்.

நாடு முழுவதும் அனைத்து சேவைகளும் தற்போது டிஜிட்டல் முறையில் மாறிவிட்டது. குறிப்பாக ஆதார் அட்டை, பான் கார்டு, ரேஷன் அட்டை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஆன்லைன் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் PF கணக்குகளில் ஏதேனும் திருத்தம் இருப்பின் அதனை ஆன்லைன் மூலமாக எவ்வாறு மாற்றலாம் என்பது குறித்து காணலாம்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இபிஎஃப் கணக்கு இருக்கும். மாதம் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து அதனை எதிர்காலத்தில் திருமணம், கல்வி, வீடு அல்லது பிளாட் வாங்க, வீடு புதுப்பிக்க, மருத்துவ செலவு, ஹோம் லோன் கடன், ஏதேனும் பேரழிவு காலத்தில் கடன், ஓய்வுக்கு முன்பாக பணம் பெறுதல் என பல காரணங்களுக்காக பணம் எடுக்கலாம். இதற்கு முன்பாக இந்த பணம்எடுக்க நீங்கள் பார்ம் 31-ஐ நிரப்ப வேண்டியிருக்கும். இதே ஆன்லைன் மூலம் என்றால் உங்களது UAN நம்பரை பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.

இந்நிலையில் கொரோனா காரணமாக பலர் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். எனவே அரசு தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து 75% அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம் தொகையினை எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் சிலருக்கு PF கணக்கில் ஏற்பட்டுள்ள தவறுகள் காரணமாக பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனை ஆன்லைன் மூலமாக எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து காணலாம்.

தவறுகள் குறித்த விவரம்:

  • முதலில் உங்களது UAN வங்கி கணக்குடன் இணைக்கப்பட வேண்டும். அப்படி இணைக்காவிட்டால் அவசர காலங்களில் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்படும்.
  • குறிப்பாக பிஎஃப் கணக்கில் வழங்கப்பட்ட IFSC கோடு என்பது மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.
  • மேலும் சிலர் தங்களது KYC சரியாக பூர்த்தி செய்திருக்க மாட்டார்கள்.எனவே KYC விவரங்கள் சரியாக உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும்.
  • மேலும் உங்களது பிறந்த தேதி சரியாக உள்ளதா என சரி பார்க்க வேண்டும். ஆன்லைனில் பயன்படுத்தும் போது தேதியினை மாற்றிக் கொடுத்து விட்டு பின்னர் பல சிக்கல்கள் ஏற்படும்.
  • இறுதியாக ஆதார் அட்டையுடன் பான் அட்டை இணைந்திருக்க வேண்டும்.
  • அப்படி இணைக்கப்படவில்லை எனில், நீங்கள் பிஎஃப் தொகையை திரும்ப பெற விண்ணப்பிக்கும் போது நிராகரிக்கப்படும். மேலும் உங்கள் வங்கி கணக்கு விவரங்களை சரியாக தவறு இல்லாமல் வழங்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: