தமிழ்நாடு

பள்ளிகள் திறக்கும் வரை ஆன்லைன் வகுப்புகள் – CEO உத்தரவு!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் வரை ஆன்லைன் கல்வி நடைபெறுவதை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், உரிய பதிவேடுகளில் பதிய வேண்டும் என ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் மூலமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பள்ளி நிர்வாகங்கள் தங்களின் ஆசிரியர்கள் மூலம் வழக்கம் போல பாடங்களை கற்பித்து வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலம் மாணவர்களின் கற்றல் இடைவெளி இன்றி தொடரப்படுகிறது. ஆன்லைன் கற்றலை ஊக்கப்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் புதிய அணுகுமுறைகளை பின்பற்றுகின்றனர். பள்ளி மாணவர்களுக்காக அரசு, கல்வி தொலைக்காட்சி தொடங்கியுள்ளது. இது ஏழை மாணவர்களுக்கு ஊரடங்கு காலத்தில் கற்றலை தொடர பேருதவியாக உள்ளது.

தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரம் எடுத்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கும் வரை ஆன்லைன் கல்வி நடைபெறுவதை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். பாட ஆசிரியர்கள் சுழற்சி முறையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தொடர்பு கொண்டு வீட்டில் கல்வி பயில்வதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகளில் உள்ள குழுக்கள் மூலம் மாணவர்களுக்கு படங்களையும், அனுப்பி கற்க ஊக்குவிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்தி அப்போதே திருத்தி மதிப்பெண் பட்டியலில் பதிவிட வேண்டும். அதை மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அனுப்ப வேண்டும். YouTube மூலம் ஆசிரியர்கள் தாம் எடுக்கும் பாடங்களை பதிவிட வேண்டும். அவ்வப்போது மாணவர்களை தொடர்பு கொண்டு மாணவர்களின் கற்றல் நிலையை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு கற்பித்தல் முறைகளை மாற்றிக் கொண்டு தினமும், ஆன்லைன் வகுப்புகளை தொடர வேண்டும் என ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: