உலகம்

நைக்கி நிறுவன ஊழியர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை!!

அமெரிக்காவில் உள்ள பேஷன் நிறுவனம் நைக்கி தங்கள் ஊழியர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி அலுவலகங்கள் மூடப்படும் என அந்நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் மேட் மராஸோ தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த வருடம் முதல் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து நாடுகளும் ஊரடங்கை பிறப்பித்து. மேலும் அந்தந்த பகுதிகளுக்கேற்ப நோயாளிகளின் எண்ணிகையை அறிந்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து நாடுகளிலும் கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் அதில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்து பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் அனுமதி வழங்கியது.

அதனால் ஊழியர்கள் வீட்டில் இருந்து மடிக்கணினி மற்றும் கம்ப்யூட்டர் மூலம் இணையதள சேவையை பயன்படுத்தி பணி செய்து வருகின்றனர். தற்போது வரை வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதால் கிட்டத்தட்ட ஓராண்டுகளும் மேலாக இவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலை தொடருவதால் பல்வேறு வகையான பிரச்சினைகளை சந்திப்பதாகவும் அதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

ஊழியர்களின் மன நலனை காப்பதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு வாரம் விடுமுறை வழங்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள பேஷன் நிறுவனமான நைக்கி தெரிவித்துள்ளது. இந்த ஒரு வார காலத்தில் ஊழியர்கள் யாரும் வேலை செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு நைக்கி அலுவலகங்கள் மூடப்படும் என அந்நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் மேட் மராஸோ தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையில் ஊழியர்கள் ஓய்வெடுக்க வேண்டும். குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  அந்தமானில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு!!
Back to top button
error: