தமிழ்நாடுமாவட்டம்

மாணவர்களுக்கு ஒரு வாரம் அரையாண்டு விடுமுறை!!

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவலுக்கு பிறகு, தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் நடப்பாண்டுக்கான, அரையாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது வெளியிட்டுள்ளார்.

அதாவது, டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த அமைச்சர், மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்க, பேருந்துகளில் கதவு அமைப்பது குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்திலுள்ள தரமற்ற பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்கும் முறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
Back to top button
error: