உலகம்

ஒவ்வொரு 17 நொடிக்கும் ஒரு மரணம்.. அடுத்த 6 மாதங்கள் மிக முக்கியம்: ஐரோப்பாவுக்கு கடும் எச்சரிக்கை

ஐரோப்பா கண்டம் மீண்டும் கொரோனா பெருந்தொற்றின் மையப்புள்ளியாக மாறி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஐரோப்பாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும், புதிதாக 29,000 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இது ஒவ்வொரு 17 நொடிகளுக்கும் ஒருவர் மரணமடைந்துள்ளதை சுட்டிக்காட்டுவதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவிற்கான பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் க்ளூக் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நடவடிக்கைகள், தற்போது பாதிப்புகளை கட்டுப்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அக்டோபர் மாதம் தொடங்கி, கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை ஐரோப்பாவை புரட்டி எடுக்க,

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் நோய் பரவுவதைத் தடுக்க கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மீண்டும் அறிமுகப்படுத்தியது.

இதுவரை, ஐரோப்பாவில் 15,738,179 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், மேலும் 354,154 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளில் பெரும் பகுதி இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஜேர்மனியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பாவை பொறுத்தமட்டில், இங்கிலாந்தில் 53,870 பேர் என அதிக எண்ணிக்கையிலான இறப்பு எனவும், பிரான்சில் 2,115,717 என அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

உலகளாவிய கொரோனா பாதிப்புகளில் ஐரோப்பா 28 சதவீதத்தையும் இறப்புகளில் 26 சதவீதத்தையும் கொண்டுள்ளது.

ஐரோப்பா இந்த சிக்கலில் இருந்து மீண்டு வரும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறும் டாக்டர் க்ளூக், ஆனால் அடுத்த ஆறு மாத காலம் மிக மிக முக்கியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

loading...
Back to top button
error: Content is protected !!