இந்தியா

ஒமைக்ரான் எதிரொலி.. பள்ளிகள் மீண்டும் மூட வாய்ப்பு!!

மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் தொற்று மேலும் அதிகரித்தால் பள்ளிகள் மூடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது. தற்போது, ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு பல நாடுகளில் பரவியுள்ளது. அந்த வகையில் இந்தியாவிலும் இந்த வகை கொரோனா பரவி வருகிறது.

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 213ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

varsha gaikwad featured image

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் தொற்று மேலும் அதிகரித்தால் பள்ளிகள் மூடப்படலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 1ஆம் தேதி மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: