உலகம்

ஒமைக்ரான் இவர்களுக்கு மோசமான ஆபத்தை விளைவிக்கும்.. WHO எச்சரிக்கை..!

உலகம் முழுவதும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில், மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் டெல்டா வைரஸ் மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொடர் பரவலை தடுக்க மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை அந்தந்த நாட்டு அரசுகள் முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றன. இந்தியாவில், தற்போது 3ம் அலை தொடங்கி பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் எச்சரித்திருந்தது. இதனால், இந்தியா முழுவதும் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கும், வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

பல மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இது குறித்து எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ள உலக சுகாதார அமைப்பு, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு இந்த ஒமைக்ரான் வைரஸ் மிகவும் மோசமான ஆபத்தை விளைவிக்கும் என எச்சரித்துள்ளனர். இதனால் மக்கள் அனைவரும் விரைந்து தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: