தமிழ்நாடுமாவட்டம்

தமிழ்நாட்டில் 34ஆக அதிகரித்த ஒமைக்ரான் பாதிப்பு!!

தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 34ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆபத்தில் உள்ள அதாவது ஹை ரிஸ்க் பட்டியலில் உள்ள 12 நாடுகளில் இருந்து தமிழகம் வந்த மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், எஸ்.ஜீன் ட்ராப் என்று சொல்லக்கூடிய ஒமைக்ரான் அறிகுறி தென்பட்ட 57 பேரின் மாதிரிகள் அடுத்தக்கட்ட மரபணு பகுப்பாய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதனால் தற்போது 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் மொத்த ஒமைக்ரான் பாதிப்பானது 34ஆக அதிகரித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: