இந்தியா

இந்தியாவில் அரைச்சதத்தை நெருங்கிய ஒமிக்ரான் பாதிப்பு!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இருப்பினும் நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில், இன்று டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 49 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் மட்டும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதால் அந்த மாநில மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: