தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டம் – ஜாக்டோ ஜியோ மனு!!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு 14 கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை அளித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு ஜாக்டோ ஜியோ சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த மனுவில் 14 கோரிக்கைகள் உள்ளடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த மனுவில் குறிப்பிடப்பட்டவைகள் பின்வருமாறு, கடந்த 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.

இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காக கடந்த செப்டம்பர் 2017, ஜனவரி 2019 ஆகிய காலங்களில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்திய வேலை நிறுத்த போராட்ட காலங்களை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும். கடந்த ஜாக்டோ- ஜியோ போராட்ட காலத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீது காவல்துறையால் புனையப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கொரோனா நோய் தொற்று காலத்தில் கடந்த அதிமுக அரசு மூன்று தவணை அகவிலைப்படியை முடக்கியது. தற்போது மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு ஜூலை 2021 முதல் 11 சதவீதம் அகவிலைப்படியை அறிவித்துள்ளது. மத்திய அரசு வழங்கியுள்ள அகவிலைப் படியை தமிழக அரசு உடனடியாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.

முதுநிலை ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள், கண்காணிப்பாளா்கள், தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப் பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். 3,500 அரசு தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும் 3,500 சத்துணவு மையங்களை மூடுவதையும் முற்றிலுமாக கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு உள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தொழிலாளர் கல்வி நிலையத்தில் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!
Back to top button
error: