தமிழ்நாடு

4 நிமிடம் தாமதம்.. நீட் தேர்வு எழுத அனுமதிக்காத அலுவலர்!

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று (செப்டம்பர் 12) நடைபெற்று வருகிறது. அதன்படி, 480 மாணவர்கள் மயிலாப்பூரிலுள்ள உள்ள பிஎஸ் சீனியர் செகன்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், மாணவர்கள் காலை 11 மணி முதல் தேர்வு மையத்திற்குள் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தலின்படி, மதியம் 1:30 மணிக்கு தேர்வு மையத்தின் கேட் மூடப்பட்டது.

அப்போது, மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் மெய்யழகன் என்ற மாணவர், பிற்பகல் 1:34 மணிக்கு நான்கு நிமிடங்கள் தாமதமாக தேர்வு மையத்திற்கு வந்தார், அதிகாரிகள் அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.

பின்னர், வெளியில் உள்ள மற்ற மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் மாணவரை உள்ளே நுழைய வலியுறுத்தினர். ஆனால், நேரம் கடந்துவிட்டதால் தேர்வு மைய அதிகாரிகள் அந்த மாணவரை அனுமதிக்க மறுத்தனர்.

இதுகுறித்து மாணவர் கூறும்போது, நான் வரும்போது சிறிது விபத்து நடைபெற்றது. இதுவே கால தாமதத்திற்கு காரணம், என்று அவர் கூறினார்.

நான்கு நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவரை தேர்வு எழுத அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது அங்கிருந்த பெற்றோரை மட்டுமின்றி பலரையும் அதிர்ச்சிக்கும் கொந்தளிப்புக்கு ஆளாக்கியுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழந்தால் ரூ.5 லட்சம் – அரசாணை வெளியீடு!!
Back to top button
error: