இந்தியா

காணாமல் போன 894 குழந்தைகள் மீட்பு.. ஒடிசா போலீஸ் நடவடிக்கை..

கடந்த 8 நாட்களில் 894 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில காவல்துறை டிஜிபி அபே கூறியுள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் ஜனவரி 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை, காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் சிறப்பு அதிரடித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அப்போது, 894 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஒடிசா மாநில காவல்துறை டிஜிபி அபே கூறியதாவது, “காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் சிறப்பு அதிரடித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 8 நாட்களில் சுமார் 894 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட 894 குழந்தைகளில் 800 பேர் சிறுமிகள் என்றும், 94 பேர் சிறுவர்கள் என்றும் தெரிவித்தார். மேலும், ஒடிசா மாநிலம் முழுவதும் குழந்தைகள் காணவிலலை என தொடர் புகார் வந்ததை அடுத்து, குழந்தைகளை மீட்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது” என தெரிவித்தார்.

Back to top button
error: Content is protected !!