ஆரோக்கியம்

உடல் பருமனை இப்படியும் குறைக்கலாம்!

பெரும்பாலானோருக்கு உடல் பருமன் ஏற்பட போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, உடல் பருமனுக்குப் பரம்பரை ஒரு முக்கியக் காரணமாகும். பெற்றோருக்கு உடல் பருமன் இருக்குமானால், மரபுரீதியாக அடுத்த தலைமுறைக்கு இது கடத்தப்படுகிறது. பொதுவாக உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை, இதற்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

எண்ணெயில் வறுத்த, பொரித்த கொழுப்புள்ள உணவு வகைகளை அதிகமாக உண்பது, சோம்பலான வாழ்க்கை முறை, உடலியக்கம் குறைவது, உடலுழைப்பு, உடற்பயிற்சி இல்லாதது, தைராய்டு பிரச்சனை போன்றவை உடல் பருமனைச் வேகமாக அதிகரித்துவிடும். சில மாத்திரைகளின் பக்கவிளைவாகவும் உடல் எடை அதிகரிக்கலாம். ஹார்மோன் மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகள், பயோகிளிட்டசோன் எனும் நீரிழிவு நோய் மாத்திரை, இன்சுலின் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.

செய்ய வேண்டியவை

பீட்ரூட்டில் உணவுச் சத்துக்கள் அதிகம் உண்டு. மேலும் பீட்ரூட்டில் கொழுப்புச் சத்து கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏராளமான நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ள பசலைக்கீரையை, எடையைக் குறைக்க நினைப்போர் அடிக்கடி தங்களது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பூசணிக்காயில் கலோரி மிகவும் குறைவாக இருப்பதால், உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக சாப்பிடலாம்.

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க செய்யும்.

கேரட்டை தினந்தோறும் ஜூஸ் அல்லது பச்சையாக சாப்பிட்டு வந்தால், வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும்.

தக்காளியை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், மிகவும் நல்லது. தக்காளிக்கு உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது.

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் அதிக அளவு வைட்டமின்களும் பல்வேறு வகையான அமிலங்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து எடை கூடாமல் தடுக்கும்.

ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்துவிடும். எனவே எடை குறைய விரும்புவோர், ஆப்பிளை தினமும் சாப்பிடுவது சிறந்தது.

உடல் எடையைக் குறைக்க நினைப்போர், மாதுளையை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைவதைக் காணலாம்.

தினமும் நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், டென்னிஸ், கைப்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து போன்ற ஏரோபிக் பயிற்சிகளில் ஒன்றைச் செய்ய வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை

  • குளிர்பானங்கள்
  • குக்கீஸ், கேக்
  • உருளைக்கிழங்கு சிப்ஸ்
  • பீட்சா
  • ஐஸ்கிரீம்
  • சாக்லேட்
  • எண்ணெயில் பொரித்த உணவுகள்

பாதிப்புகள்

உடல் பருமன் காரணமாக டைப் 2 சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூச்சுத் திணறல், மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி, குதிகால் வலி, மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய், பித்தப்பைக் கற்கள், குடலிறக்கம், குறட்டை, ‘ஸ்லீப் ஏப்னியா’ எனும் உறக்கச் சுவாசத் தடை, மலச்சிக்கல், மலட்டுத்தன்மை, மாதவிலக்குப் பிரச்சனைகள், சினைப்பை நீர்க்கட்டி, மூலநோய், மனச்சோர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: