பொழுதுபோக்கு

குழந்தைகளுக்கு சத்தான கோதுமை – பீட்ரூட் தோசை!

காய் வகைகளில் பீட்ரூட் என்பது மிகவும் சத்துக்கள் நிறைந்த ஒன்றாகும். இவற்றை குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டும். பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை நோய் வருவதைத் தடுக்கலாம். உங்களது குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் கோதுமை – பீட்ரூட் தோசை செய்யும் முறையை அறிந்து கொள்வோம் வாருங்கள்

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1 கப்,

உப்பு – தேவைக்கேற்ப,

அரைத்த உளுத்தம் பருப்பு மாவு – கால் கப்,

துருவிய பீட்ரூட் – கால் கப்,

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 3,

எண்ணெய் – தாளிக்க + தோசைக்கு தேவையான அளவு.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுத்தம் பருப்பு மாவு, உப்பு, கோதுமை மாவு ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.

கலந்த மாவை எட்டு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் வெங்காயம், பச்சை மிளகாய், பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வதக்கிய பீட்ரூட் கலவையை மாவில் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், மெல்லிய தோசைகளாக ஊற்றி வேகவைத்து எடுக்க வேண்டும்.

சுவையான சத்தான கோதுமை பீட்ரூட் தோசை ரெடி.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  டேஸ்ட்டியான சிக்கன் பிரட்டல்!
Back to top button
error: