பொழுதுபோக்கு

குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் பிரியாணி!

உண்ணும் பொருட்களின் சுவையைவிட அதன் கலரை பார்த்தே பெரும்பாலான குழந்தைகள் சாப்பிடுகின்றனர். அந்தவகையில் உங்கள் குழந்தைகள் மீதம் இல்லாமல் சாப்பிட சத்தான சுவையான பீட்ரூட் பிரியாணி பொருத்தமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

 • பீட்ரூட் – ஒன்று
 • அரிசி – ஒரு கப்
 • கொத்தமல்லி இலை, புதினா இலை (சேர்த்து) – ஒரு கப்
 • பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்)
 • இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
 • மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
 • வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)
 • மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்
 • சீரகத்தூள் – 2 டீஸ்பூன்
 • சோம்பு – ஒரு டீஸ்பூன்
 • பட்டை – ஒரு இஞ்ச் நீளத் துண்டு
 • கிராம்பு – 2
 • ஏலக்காய் – 3
 • நெய் அல்லது எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
 • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

அரிசியை நன்றாகக் கழுவி வைக்கவும். பீட்ரூட்டை நறுக்கி தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்து வையுங்கள். அரைத்த பீட்ரூட் உடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து இரண்டு கப் வருமாறு கலந்து வையுங்கள். குக்கரில் எண்ணெய் (அ) நெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், சோம்பு, கிராம்பு சேர்த்து வதக்குங்கள்.

பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்குங்கள். இலைகள் வதங்கியதும், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் அரைத்து கலந்து வைத்திருக்கும் பீட்ரூட் தண்ணீரை ஊற்றி, கொதி வந்ததும் ஊறவைத்த அரிசியைப் போட்டு, குக்கரை மூடி, 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிட்டு எடுங்கள். சுவையான பீட்ரூட் பிரியாணி ரெடி

இந்தப் பிரியாணியின் கலர் வித்தியாசமாக இருப்பதால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். சுவையும் பிரமாதமாக இருக்கும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  மீதமுள்ள இட்லி மாவில்.. காரசாரமான ருசியில்.. மொறுமொறுப்பான ரெசிபி செய்து அசத்துங்க..!!
Back to top button
error: