பொழுதுபோக்குதமிழ்நாடு
சத்துகள் நிறைந்த வாழைப்பழ மில்க் ஷேக்..!

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து போன்றவை உள்ளது, இத்தகைய வாழைப்பழத்தில் மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பால் – 2 கப்
வாழைப்பழம் – 1
தேன் – 2 ஸ்பூன்
சர்க்கரை- தேவையான அளவு
ஐஸ் கட்டி- 1
செய்முறை
1. வாழைப்பழத்தினை தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. அடுத்து மிக்சியில் சர்க்கரையினைப் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்.
3. அடுத்து மிக்சியில் பால், வாழைப்பழம், சர்க்கரை, தேன் சேர்த்துக் கலந்து மிக்சியில் மைய அரைத்து ஐஸ் கட்டி சேர்த்தால் வாழைப்பழ மில்க் ஷேக் ரெடி.