வேலைவாய்ப்பு

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் General Manager மற்றும் Deputy General Manager பதவிக்கு தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

காலிப்பணியிடங்கள்:

General Manager மற்றும் Deputy General Manager பணிக்கென்று 84 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பணிக்கான தகுதிகள்:

General Manager (LA & EM) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் Pay Band-3 (Rs.15,600-39,100) with Grade Pay Rs.5400/-ல் பணிபுரிந்திருக்க வேண்டும்.

Deputy General Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Civil Engineering பாடப்பிரிவில் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் implementation of Infrastructure பிரிவில் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலம் வேளைகளில் குறைந்தது 6 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமாகும்.

General Manager (Technical) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Civil Engineering பாடப்பிரிவில் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் Pay Band-3 (Rs.15,600-39,100) with Grade Pay Rs.5400/- ல் 14 வருட முன் அனுபவம் அல்லது implementation of Infrastructure பிரிவில் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலம் வேளைகளில் குறைந்தது 9 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருப்பது வேண்டும்.

வயது வரம்பு:

56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதியம்:

General manager ரூ. 37,400/- முதல் ரூ.67,000/-வரையும் , Deputy General Manager பணிக்கு ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும்.

தேர்வு செயல்முறை:

எழுத்து தேர்வு (WRITTEN EXAM) அல்லது நேர்காணல் (INTERVIEW) மூலம் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரிக்கு சென்று விண்ணப்ப படிவத்தை நிரப்பி, சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மேலும் இப்பணிக்கான கால அவகாசம் 04.02.2022 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification – https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed-Advt..pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: