தமிழ்நாடு

சிஸ்டம் சரியில்லைன்னு சொல்றவங்க கிட்டயே வாக்காளர் அடையாள அட்டை இல்லை – ரஜினியை மறைமுகமாக சீண்டும் கமல்..!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சிஸ்டம் சரி இல்லை, எல்லோரும் திருட்டு பயல்கள் என்றும் கூறிய ரஜினியை சீண்டியுள்ளார். மேலும் அவர் சிஷ்டம் சரியில்லை என்று கூறிய பலரிடம் வாக்காளர் அடையாள அட்டை கூட இல்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

சீண்டும் கமல்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் திரையுலகில் பிரபலமானவர் மட்டும் அல்லாமல் போன ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பங்கேற்றார். அவர் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் தனது கட்சியை தொடங்கினார். தற்போது வாக்காளருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோ ட்விட்டரில் வெளிட்டார் கமல்ஹாசன்.

kamalhasan and rajini

அந்த வீடியோவில் சிஷ்டம் சரியில்லை என்று கூறிய பலரிடம் இந்திய குடிமகனுக்கு உரிமையான வாக்காளர் அடையாள அட்டை கூட இல்லை என்று கூறி சீண்டியுள்ளார். இதனை ரஜினிகாந்த் 2017 ஆண்டு ரசிகர்களை சந்தித்தபோது கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக கமல்ஹாசன் ரஜினியை சீண்டியுள்ளார்.

எச்சரிக்கை விடுப்பு

இந்தியனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை என்பது அவரது உரிமை மற்றும் அடையாளம். இதனை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்று கூறியுள்ளார். 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொருவரும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் அது அவருக்கான அடையாளம் வேண்டும் கூறியுள்ளார்.

kamalhasan video

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் செய்யும் சிறப்பு மையங்களில் பதிய வேண்டும் என்று கூறினார். “வாக்காளர் தனது கடமையை சரியாக சமூகத்திற்கு செய்யாவிடில் தனது உரிமையை இழந்து விடுவோம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

loading...
Back to top button
error: Content is protected !!