தமிழ்நாடு

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை – அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 1ம் தேதி 9, 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தின் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, படிக்கும் பள்ளிகள் கிருமிநாசினி தெளித்து சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். அதே சமயம் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்க வேண்டாம் எனவும் பல தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வந்த இந்த கேள்விகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பள்ளிகள் திறப்பு குறித்து தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இப்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தற்போது 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  புதிய ஆளுநராக ஆர்.என் ரவி இன்று பதவியேற்பு – முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!!
Back to top button
error: