தமிழ்நாடுமாவட்டம்

புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பின் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அதன்பின்னர், புயலாக மேலும் வலுப்பெற்று வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசாவை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது:-

நாளை கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதே சமயம், சென்னை, காஞ்சிபுரம், தென் மாவட்டங்களில் மிதமான மழை தொடரும்”, என்று தெரிவித்தார்.

மேலும் ”இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது டிசம்பர் 2 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, டிச.4 ஆம் தேதி வடக்கு ஆந்திரா, தெற்கு ஓடிசாவை நோக்கி நகரும். எனினும், புயல் தொடர்பாக தமிழகத்திற்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை. ஏனெனில், இது வடக்கு ஆந்திரா, தெற்கு ஓடிசாவை நோக்கி நகருவதால் அந்த பகுதிகளில் மட்டுமே கனமழை பாதிப்பு இருக்கும். இருப்பினும், வங்கக்கடல் பகுதிகளுக்கு தமிழக மீனவர்கள் 3 நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்”, என்று தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  ஊரக உள்ளாட்சி தேர்தல் – 97,831 பேர் வேட்புமனு தாக்கல்!!
Back to top button
error: