தமிழ்நாடு

அமமுக போட்டியில்லை ?.. டில்லியில் டிடிவி முகாம்..

வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையை முடித்து சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் வரும் 27ம் தேதி விடுதலையாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலா விடுதலையை கொண்டாட அமமுக ரகசியமாக ஏற்பாடுகளை செய்துவந்தது. இந்த நிலையில் கடந்த 7ம் தேதி அவசர பயணமாக கார் மூலம் பெங்களூர் சென்ற டிடிவி அங்கிருந்து டில்லி சென்றார். கடந்த 3 நாட்களாக டில்லியில் டிடிவி இருக்கிறார்.

சசிகலாவின் விடுதலை மற்றும் வரும் தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு குறித்த சில விளக்கங்களுக்காக டிடிவி டில்லியில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். வரும் தேர்தலில் சசிகலா எந்தவித நிலைப்பாடும் எடுக்க கூடாது.

அதேபோல் அமமுக இந்த தேர்தலில் போட்டியிடக்கூடாது என 2 நிபந்தனைகளின் அடிப்படையிலான பேச்சுவார்த்தைக்காகவே டிடிவி டில்லி இருக்கிறார் என்கின்றனர்.

இது குறித்து பாஜ மேலிடத்துடன் டிடிவி பேசி வருகிறார். அவரது உறுதிமொழியை அடுத்தே சசிகலா விடுதலையாவார் என்கின்றனர் டில்லி வட்டாரத்தினர்.

Back to top button
error: Content is protected !!