தமிழ்நாடு

சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் இல்லை!!

தமிழகத்தில் ஊரடங்கு காலத்திலும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அதில் சமீபத்தில் அறிவித்தபடி மாற்றங்கள் இல்லை என்று தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டது. இதனை தடுக்க முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளே ஒரே தீர்வாக இருந்தது. அதனால் மாநிலம் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் எனவும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் ரயில் சேவைகள் தொடர்ந்து இயக்கப்பட்டன.

முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. முன்பதிவு இல்லாத ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ரயில்களில் கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக காரைக்குடி – சென்னை எழும்பூர் (02606) மற்றும் சென்னை எழும்பூர் – மதுரை (02635) இடையேயான சிறப்பு ரயில் பராமரிப்பு பணி காரணமாக செங்கல்பட்டு மற்றும் சென்னை எழும்பூர் இடையே வருகிற 29ம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்ட்ரல் – மங்களூரு (06627) சிறப்பு ரயில் வருகிற 28ம் தேதி சென்ட்ரல் மற்றும் ஜோலார்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த சிறப்பு ரயில் வழக்கம் போல் இயங்கும். அதேபோல் தன்பாத் – ஆலப்புழா (03351) சிறப்பு ரயில், வருகிற 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் நிற்காது என்று தெற்கு ரயில்வே வாரியம் தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை – முதல்வர் துவக்கி வைப்பு!!!
Back to top button
error: