தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்..!

தமிழகத்தில் நாளை முதல், இரவு 10 மணியிலிருந்து, அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவி வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணியிலிருந்து, அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

வெளிமாநிலம், மாவட்டங்களுக்‍கு இடையிலான பொது மற்றும் தனியார் போக்‍குவரத்துக்‍கு இரவு 10 மணி முதல் – காலை 4 மணி வரை அனுமதியில்லை என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

எனினும், அத்தியாவசியப் போக்‍குவரத்துக்‍கு அனுமதி அளிக்‍கப்பட்டுள்ளது. அவசர மருத்துவத் தேவைகள், விமான நிலையம், ரயில் நிலையம் செல்ல வாடகை ஆட்டோ, டாக்‍சி, தனியார் வாகனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

மேலும், அத்தியாவசியப் பணிகளான பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனை, மருந்தகங்கள், சரக்‍கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள், இரவு நேர ஊரடங்கின்போதும் அனுமதி அளிக்‍கப்படுவதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம் – பெட்ரோல், டீசல் பங்க்‍குகள் தொடர்ந்து செயல்படலாம் – தடையின்றி செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருட்கள், இரவு ஊரடங்கிலும் செயல்பட அனுமதி அளிக்‍கப்பட்டுள்ளது.

ஐ.டி. நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

தேநீர், உணவு விடுதி, காய்கறிக் கடைகள், பலசரக்‍கு கடைகள் உள்ளிட்டவைகள், இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்‍கப்படுவதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  உங்க மூட்டு பகுதியில் கருமையா இருக்கா? இதனை போக்க என்ன பண்ணலாம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: