உலகம்

இலங்கையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு அறிவிப்பு!!

இலங்கையில் கொரோனா நான்காம் அலை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஆகஸ்ட் 16 (இன்று) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக சுகாதார அமைப்பு பல்வேறு நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள நாட்டு அரசுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமெடுத்து வருகிறது. அதே போல் இலங்கையில் கொரோனா நான்காம் அலை தற்போது வேகமெடுத்து கொண்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு தொற்று 3,000க்கும் அதிகமாக பாதிப்புகள் பதிவாகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,4,35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 160 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்புகள் உயர்வதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த தொற்றை கட்டுப்படுத்த 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என மருத்துவ சங்கத்தினர் அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து கொரோனா தடுப்பின் தேசிய செயல்பாட்டு குழுவினர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு கொரோனா நான்காம் அலையின் தடுப்பு பணியாக ஆகஸ்ட் 16 (இன்று) முதல் இலங்கையில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பொது நிகழ்ச்சிகள் நடத்தவும், மக்கள் ஒன்று கூடவும் தடை விதிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவருந்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  உலகளவில் கொரோனாவால் 21.61 கோடி பேர் பாதிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: