இந்தியா

மணிப்பூர் மாநிலத்தில் 15 நாட்களுக்கு இரவு ஊரடங்கு நீட்டிப்பு – பொதுமுடக்க தளர்வுகள் அறிவிப்பு!!

கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு மாநிலத்தில் மேலும் 15 நாட்களுக்கு இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள பொதுமுடக்கத்தில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கிய நிலையில், மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் 2வது அலை சற்று கட்டுக்குள் வந்துள்ளது. எனவே அமலில் உள்ள பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் டெல்டா பரவல், கொரோனா 3வது அலை முன்னெச்சரிக்கை ஆகியவற்றின் காரணமாக கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளது. தற்போது மணிப்பூர் மாநில அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில் மேலும் 15 நாட்களுக்கு (செப்டம்பர் 6 வரை) இரவு ஊரடங்கு தொடரும் என கூறப்பட்டுள்ளது.

அதாவது இரவு ஊரடங்கு உத்தரவு மாலை 6 மணி முதல் அதிகாலை 5 மணி வரை என செப்டம்பர் 6ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் சமூக கூட்டங்கள் /விருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கட்டுப்பாட்டு மண்டலங்கள் காவல் துறை மற்றும் சுகாதாரத் துறை குழுக்களால் கண்டிப்பாக கண்காணிக்கப்படும். அதுமட்டுமின்றி அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இதர பொதுப் பயன்பாடுகள் ஆகியவை ஆகஸ்ட் 23 முதல் குறிப்பிட்ட அளவு ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தகவல், மின்சாரம், தீயணைப்பு சேவை, பொது சுகாதார பொறியியல் துறை, நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோகம், வீடு, சுகாதாரம், நிவாரணம் மற்றும் பேரிடர் மேலாண்மை, காடு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், நிதி மற்றும் கருவூலங்கள், காவல்துறை, நீர் வளங்கள், விவசாயம் மற்றும் தோட்டக்கலை துறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சாதாரணமாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  பஞ்சாப் முதலமைச்சராக சரண்ஜித் சிங் இன்று பதவியேற்பு!
Back to top button
error: