உலகம்

சிகெரட் விற்பனைக்கு தடை – நியூசிலாந்து அரசு அறிவிப்பு!!

சிகரெட் பழக்கத்தை கைவிடுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பலன் தருவதற்கு அதிக காலம் தேவைப்படுகிறது. இதனால் கடுமையான திட்டங்களை கொண்டு வருவதற்கு நியூசிலாந்து அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.

உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் மது மற்றும் சிகரெட் மற்றும் போதைப் பொருட்கள் போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாக உள்ளன. இதனால் அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றன. இதன் மூலம் பல்வேறு விதமான நோய்களும் ஏற்படுகின்றன. அதில் குறிப்பாக கேன்சர், புற்றுநோய் போன்ற உயிரிழப்பை ஏற்படுத்தும் வியாதிகளுக்கு உள்ளாகின்றன. அத்துடன் இந்த பழக்கத்திற்கு மிகவும் அடிமையாகின்றனர். அதனால் தற்போது உலகம் முழுவதும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

இதனை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது புகைப்பழக்கத்திற்கு எதிராக பல நடவடிக்கைகளை நியூஸிலாந்து அரசாங்கம் எடுத்து வருகிறது.
அதனை தொடர்ந்து புகை பழக்கத்தை கைவிடுவதற்காக எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் அதிக நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இதனால் நியூஸிலாந்து அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் மூலம் நியூஸிலாந்தில் சிகரெட் விற்பனையை தடை செய்ய போவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இவ்வாறு தடை செய்வதன் மூலம் இளைஞர்கள் வாழ்வில் சிகரெட்டைப் புகைத்து பார்க்கவே முடியாத சூழலை ஏற்படுத்தமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த புதிய சட்டம் ஒன்று கொண்டுவர போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் 2027 ஆம் ஆண்டு முதல் 14 வயதுடையவர்கள் சிகரெட்டுகளை வாங்க முடியாது என்ற சட்டம் நடப்பில் உள்ளது. அத்துடன் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டினின் அளவும் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. தற்போது இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால் சிகரெட்டுக்கு தடை விதிக்கும் இரண்டாவது நாடாக நியூஸிலாந்து இருக்கும். முதலாவது இடத்தில் பூட்டான் நாடு உள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: