உலகம்

ஜப்பானில் தொடர்ந்து அதிகரிக்‍கும் புதிய பாதிப்புக்‍கள் – டோக்‍கியோ நகரில் புதிய கட்டுப்பாட்டு விதிகள் அமல்..!

ஜப்பானில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் தலைநகர் டோக்‍கியோவில் கடுமையான பாதுகாப்பு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

24 மணி நேரத்தில் 500க்‍கும் மேற்பட்ட புதிய பாதிப்புக்‍கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, டோக்‍கியோ நகர் முழுவதும் பொதுமக்‍கள் விழிப்புடன் இருக்‍க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாலை நான்கு மணிக்‍கு மேல் வெளியிடங்களில் 4 பேருக்‍கும் அதிகமான எண்ணிக்‍கையில் பொதுமக்‍கள் கூடுவதற்கு தடை விதிக்‍கப்பட்டுள்ளது.

நோய் தாக்‍கம் குறித்த புரிதல் தான் ஒவ்வொருவரையும் வைரஸ் பிடியிலிருந்து பாதுகாக்‍கும் என பிரதமர் யோஷிஹிடே சுகா தெரிவித்துள்ளார்.

loading...
Back to top button
error: Content is protected !!