பொழுதுபோக்குதமிழ்நாடு

நியூ ஸ்டைலில் பொரித்து வறுத்த “கருவேப்பிலை சிக்கன்” ரெசிபி – வீக்எண்ட் ஸ்பெஷல்..!

சண்டே என்றாலே நாம எல்லாருக்கும் ஞாபகம் வருவது அசைவம் தாங்க. சண்டே மட்டுமாவது நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்குனும்னு எல்லாரும் ஆசைப்படுவார்கள். அவர்களுக்காவே ஒரு சிக்கன் ரெசிபி தாங்க இன்னைக்கு நாம பாக்க போறோம். சிக்கென பல டேஸ்ட்ல சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்போ நாம கருவேப்பிலையை வைத்து கருவேப்பிலை சிக்கன் சமைக்க போறோம். வாங்க எப்படி சமைக்கலாம்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

karu thing

சிக்கன் – 1/2 கிலோ

கருவேப்பிலை – 2 கைப்பிடி

பச்சை மிளகாய் – 7

எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்

மல்லி தூள் – 2 டீ ஸ்பூன்

கடலை மாவு – 1 டீ ஸ்பூன்

சோளமாவு – 1 டீ ஸ்பூன்

செய்முறை:

karu sei 1 1

முதலில் ஒரு பௌலில் 1/2 கிலோ சிக்கன், மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகு தூள், சோளமாவு, முட்டை, கடலை மாவு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கிளறி 6 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

karu sei 2

பிறகு ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பின் அதே எண்ணையில் கருவேப்பிலையை போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி எண்ணையில் பொறித்து எடுக்க வேண்டும்.

karu sei 3

தனியாக ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, வெங்காயத்தை தாளித்து அதனுடன் பொரித்து வைத்த சிக்கன் மற்றும் மிளகாய் சேர்த்து கிளற வேண்டும். பொரித்து வைத்த கருவேப்பிலையை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து இதனுடன் சேர்த்து, மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள் தூவி 3 நிமிடம் கிளறி இறக்க வேண்டும். இப்பொது சூப்பரான ‘கருவேப்பிலை சிக்கன்’ தயார்.

loading...
Back to top button
error: Content is protected !!