தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் அரிசியுடன் ராகி வழங்கும் புதிய திட்டம் – நீலகிரி மாவட்ட ஆட்சியர்!!

நீலகிரி மாவட்ட நியாய விலை கடைகளில் இனி அரசி வழங்குவதுடன் ராகியும் வழங்கும் திட்டம் செயல்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், இணையதளம் மூலமாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள், அரசு துறை அதிகாரிகள், தோட்டக்கலை துணை இயக்குநர்கள் ஷிபிலா மேரி, குருமணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விவசாய சங்ககளிடம் இருந்து 52 விதமான கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் பெற்று கொண்டார்.

உரிய அதிகாரிகளிடம் இந்த கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விவசாயிகள் பிரதம மந்திரி பசல் பீமா திட்டத்தின் மூலமாக பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழை, மரவள்ளி கிழங்கு போன்றவைகளுக்கு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏனைய பயிர்களுக்கு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து இருத்தல் அவசியம். நடப்பாண்டில் நியாயவிலைக் கடைகள் மூலமாக அரிசியுடன் ராகி வழங்கும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்த இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக வரையறுக்க விவசாயிகள் மற்றும் தோட்டக்கலை அதிகாரிகளை இணைக்கவும் ஆட்சியர் வலியுரித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: