இந்தியா

பாதுகாப்பு பெட்டகத்திற்கு புதிய விதிமுறைகள் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!

வாடிக்கையாளர்கள் ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு பெட்டகம் மூலம் சில உடமைகளை பராமரித்து வருகின்றனர். இதனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தெரிவித்துள்ளது.

விதிமுறைகள்:

வாடிக்கையாளர்கள் தங்களது பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள பெட்டகத்தை பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பெட்டகத்துக்கு ஆண்டுக்கு 2000 – 8000 ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது பாதுகாப்பு பெட்டகம் குறித்து புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

  • வாடிக்கையாளர் பொருட்கள் வங்கி ஊழியர்களால் மோசடி நடந்தால் ஒரு ஆண்டுக்கு பெறப்படும் வாடகை போன்று 100 மடங்கு தொகையை வாடிக்கையாளருக்கு வங்கி வழங்க வேண்டும்.
  • தீ விபத்து அல்லது வங்கி கட்டிடம் இடிந்து விழுந்து பாதுகாப்பு பெட்டகம் சேதமடைந்தால் இந்த இழப்பீடு தர வேண்டும்.
  • பாதுகாப்பு பெட்டகத்தில் சட்டப்புறம்பான பொருட்கள் அல்லது அபாயகரமான சாதனங்களை வைக்க கூடாது என வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தமிடப்படவேண்டும்.
  • வங்கிகளில் காலியாக உள்ள பாதுகாப்பு பெட்டகங்கள் குறித்த விபரங்களை வலைத்தளத்தில் வெளிப்படையாக பதிவிட வேண்டும்.
  • பாதுகாப்பு பெட்டகம் கிடைக்காத வாடிக்கையாளருக்கு காத்திருப்பு காலத்திற்கான பதிவு எண் வழங்க வேண்டும்.
  • வங்கியின் கவனக்குறைவால் பாதுகாப்பு பெட்டக பொருட்களுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதத்திற்கு வங்கிகள் பொறுப்பேற்க வேண்டும்.
  • நிலநடுக்கம் வெள்ளம் மின்னல் புயல் போன்ற இயற்கைச் சீற்றத்தினால் மற்றும் வாடிக்கையாளரின் அலட்சியத்தில் பாதுகாப்பு பெட்டகம் பொருட்களுக்கு ஏற்படும் சேதத்திற்கு வங்கி பொறுப்பு ஏற்காது.
  • பாதுகாப்பு பெட்டக வாடகைக்கு மூன்று ஆண்டுகள் குறித்த கால வைப்பு நிதியை வங்கிகள் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற திருத்தி அமைக்கப்பட்ட விதிமுறைகள் அனைத்தும் தற்போது பாதுகாப்பு பெட்டகத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது என கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு பெட்டக வாடகை செலுத்த தவறும் பட்சத்தில் பெட்டகத்தை உடைக்க வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது என கூறப்படுகிறது. இந்த ம்,ஊதிய நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் 2022 ஜன.1 முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  இந்தியாவில் 10 வயதிலேயே புகையிலையை கையில் எடுக்கும் சிறுவர்கள் - சர்வேயில் அதிர்ச்சி தகவல்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: