தமிழ்நாடு

சென்னையில் புதிய ரேடார் அமைப்பு திறப்பு..!

வானியல் கணிப்புகளை வலுப்படுத்தும் வகையில், சென்னை பள்ளிக்கரணையில் புதிய டாப்ளர் ரேடார் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய புவி அறிவியல் அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார்.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென பெய்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதனை தடுக்க வகையில் வானியல் கணிப்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த புதிய டாப்ளர் ரேடார் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய டாப்ளர் ரேடார் அமைப்பினை மத்திய புவி அறிவியல் அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
பயன்பாட்டிற்கு இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

சென்னை பள்ளிக்கரணையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ரேடார், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள 150கி.மீ ரேடியல் தூர வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்க உதவுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: