தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் புதிய திட்டம் – நீர்வளத்துறை அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் சில தினங்களுக்கு முன் கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகள் உடன் தொடங்கி நடந்து வருகிறது. இதில் நாள்தோறும் பல்வேறு துறை ரீதியான விவாதங்கள் எழுப்பப்பட்டு, துறை சார்ந்த அமைச்சர்களின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்களுடன் நிறைவடைந்து வருகிறது. நேற்று பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறை சார்ந்த விவாதங்கள் நடைபெற்றது. இந்த நிலையில், இன்றைக்கு நீர்வளம் மற்றும் பொதுப்பணித்துறை சார்ந்த விவாதங்கள் நடைபெற்றது.

மேலும், தமிழக நீர்நிலை மற்றும் விவசாய நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கோரிக்கை வைத்தார். இது மட்டுமல்லாமல், இந்த மரங்கள் விவசாய நிலங்களில் வளர்ந்து விவசாயத்தை கெடுத்து மாநிலத்தின் வளத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதாக கவலை தெரிவித்தார்.

இதற்கு பதில் தர எழுந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்த கோரிக்கையை அரசு ஏற்பதாகவும் இதற்காக ஒரு புதிய திட்டம் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளிப்பதாகவும், இது ஒரு மிகச் சிறந்த திட்டம் எனவும் ஆளும் அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தகுந்தது.

இதையும் படிங்க:  முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம் 5 ஆண்டுகள் நீட்டிப்பு – அமைச்சர் அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: