இந்தியா

BSNL பயனர்கள் புதிய ஆஃபர் – தினசரி 2 GB வழங்கும் திட்டம்!!!

BSNL தனது வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்கள் பயனளிக்கும் புதிய சிறப்பான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் பயனர்கள் ஏராளமான டேட்டாவை பெற உள்ளனர்.

BSNL பொதுத்துறை நெட் ஒர்க் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பயன் தரும் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் பயனர்கள் ஏராளமான வசதிகளை பெறுகின்றனர். பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து தற்போது 499 ரூபாயில் 90 நாட்களுக்கு பயன் தரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி வழங்கப்படுகிறது. இதன் மூலம் BSNL நிறுவனம் மொத்தம் 180 ஜிபி டேட்டா வழங்குகிறது.

ரூ.499 ரீசார்ஜ் பிளானில் அன்லிமிடெட் அழைப்புகளை வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர். நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வசதியும் உள்ளது. இந்த பிஎஸ்என்எல் திட்டம் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. பி.எஸ்.என்.எல் 499 திட்டம் அந்தமான் மற்றும் நிக்கோபார் வட்டத்துக்கானது. முதலில் 499 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது கூடுதல் நன்மையாக 2 ஜிபி வழங்கப்படுகிறது.

இது தவிர, BSNL 89 ரீசார்ஜ் திட்டம் BSNL Tunes மற்றும் Zing போன்ற இலவச சேவைகளும் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகை தற்போது உள்ள மற்றும் புதிய ப்ரீபெய்ட் பயனர்களுக்கு கிடைக்கிறது. மேலும் டாப்-அப், ஆன்லைன் ரீசார்ஜ் போர்ட்டல் மூலம் BSNL 89 திட்டத்தை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: