ஆப்பிள் சமூக பாதுகாப்பு அம்சத்தை அதிக சந்தைகளுக்கு கொண்டு வருகிறது. இது கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. மெசேஜஸ் செயலியில் நிர்வாண புகைப்படங்கள் பகிரப்படும்போது அவற்றை மங்கலாக்குவது இதன் சிறப்பு.
இந்த அம்சம் இப்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்தில் உள்ள iPhone பயனர்களுக்குக் கிடைக்கிறது. இது எதிர்காலத்தில் மற்ற சந்தைகளில் உள்ள பயனர்களுக்கும் கிடைக்கும் என ஆப்பிள் கூறியுள்ளது.
குழந்தைகள் நிர்வாண புகைப்படங்களைப் பார்ப்பதைத் தடுக்க, இந்த அம்சத்தை ஆன் செய்தால் அத்தகைய புகைப்படங்கள் மங்கலாக தெரிய செய்கிறது.
இது இயந்திர கற்றல் தொழில்நுட்பத்துடன் செயல்படுகிறது. எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்பு இருக்கும் என்றும், உள்ளடக்கத்தைப் பகிரும் பயனர்களைத் தவிர வேறு யாரும் பார்க்க மாட்டார்கள் என்றும் ஆப்பிள் கூறுகிறது. குழந்தைகள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தினால் பெரியவர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh