தமிழ்நாடுமாவட்டம்

புதிய டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை – பதிவிறக்கம் செய்வது எப்படி?

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் முதன்முறையாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து இன்னும் வாக்காளர் அடையாள அட்டை வராதவர்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக வாக்களிப்போர் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்து தேர்தலுக்கு வாக்காளர் அட்டை வராதவர்கள் ஆன்லைன் மூலமாக வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்ய வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

இதன்படி டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டை பெறும் திட்டம் இந்த மாதம் துவக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தங்களது செல்போன் எண்ணை வைத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பு புதிதாக விண்ணப்பித்த 21.39 லட்சம் வாக்காளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அதாவது நவம்பர் 16 முதல் டிசம்பர் 15 வரை நடத்தப்பட்ட புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் மூலமாக பெயர் சேர்த்தவர்கள் அவர்களது செல்போன் எண்ணிற்கு அனுப்பப்பட்ட குறுந்தகவலில் வரும் இபிஐசி எண்ணை வைத்து http://www.nvsp.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்ற வாக்காளர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!