தமிழ்நாடுஆன்மீகம்மாவட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு..!

கொரானா பரவல் காரணமாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகள், கர்ப்பிணி பெண்கள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் கோயிலுக்குள் உள்ளே வர அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் தேங்காய் பழம் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, கோயில் வளாகத்திற்குள் அமரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும், உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: