தமிழ்நாடு

1.10 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு – சற்றுமுன் தொடக்கம்!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் இருந்து 1.10 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் பலத்த பாதுகாப்புகளுடன் தேர்வு நடைபெற்று வருகிறது.

தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்புகள் உள்ளது. அடுத்த கல்வியாண்டில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இதனிடையே நடப்பு கல்வியாண்டிற்கான நீட் தேர்வு இன்று 198 நகரங்களில் தொடங்கி உள்ளது. வழக்கமாக 155 நகரங்களில் தேர்வு நடைபெறும் நிலையில் இம்முறை கொரோனா அச்சம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

MBBS, BDS, யுனானி, சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. குறிப்பாக நடப்பாண்டில் தேர்வெழுத வருவோர் N95 மாஸ்க் அணிந்திருப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது. இன்று பிற்பகல் 1.30 மணிவரை மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். முகக்கவசம் அணிதல், உடல் வெப்பநிலை மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டது.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி உள்ள தேர்வு மாலை 5 மணிவரை நடைபெறும். தமிழகத்தில் இருந்து நடப்பாண்டில் மொத்தம் 1.10 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 70,594 மாணவிகள், 40,376 பெண்கள் மற்றும் 1 திருநங்கை ஆகியோர் அடக்கம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  சீருடை பணியாளர் தேர்வாணைய ஜிஜி உட்பட 8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!!!
Back to top button
error: