இந்தியா

இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,94,720 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று விகிதம் 11.05 சதவீதமாக அதிகரித்துள்ளது.

புதிய உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் பாதிப்பானது, நாடு முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,868 ஆக உயர்ந்துள்ளன. அதன் பெரும்பாலான பாதிப்புகள் மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் பதிவு செய்யப்படுகின்றன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,61,900 மாதிரி சோதனைகள் செய்யப்பட்டன, நேற்று வரை மொத்தம் 69,52,74,380 மாதிரி சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 1,94,720 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன, 60,405 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 442 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மொத்த பாதிப்புகள்: 3,60,70,510

சிகிச்சை பெறுவோர்: 9,55,319

மொத்த குணமடைந்தோர்: 3,46,30,536

மொத்த உயிரிழப்புகள்: 4,84,655

மொத்த தடுப்பூசிகள்: 1,53,80,08,200

ஒமைக்ரான் பாதிப்புகள்: 4,868


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: